லீடர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அண்ணாச்சி சம்பவம் செய்தாரா? சமாதானம் ஆனாரா?

படத்தின் துவக்கத்தில் சந்தோஷ் பிரதாப் பெரிய கடத்தல் சம்பவத்திற்கான விதையை ஒரு கொலையோடு போடுகிறார். அதை அப்படியே கட் செய்தால், தூத்துக்குடியில் கார்செட்டில் வேலை செய்கிறார் ஹீரோ லெஜண்ட் சரவணன். அவருக்கு அன்பான ஒரு மகள். மகளுக்காக எதையும் செய்யும் அப்பாவான அவருக்கு இன்னொரு முகம் உண்டு. அந்த முகம் எப்போது எப்படி வெளிப்படுகிறது என்பதை இடைவேளை வரை அசத்தலான திரைக்கதையோடு சொல்லியுள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார். பின்பாதியில் படம் மாணிக்கம் பாட்ஷாவாக உருமாறுவது போல நகர்கிறது

நடிகராக இன்னும் கோட்டை தொடாவிட்டாலும், மொத்தமாக கோட்டைவிடவில்லை சரவணன். என்ன கொடுமை சரவணன் இது என்று கலாய்த்தவர்களுக்கு ஓரளவு நல்ல பதில் சொல்லியுள்ளார் லெஜண்ட். But இது பத்தாது. ஷாம் தைரியமான போலீஸ் அதிகாரியாக போல்டாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா கேரக்டர் தரமாக எழுதப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார். பாயல்ராஜ்புட் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. சந்தோஷ் பிரதாப் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். லால், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, கதிர் உள்ளிட்ட பலரும் அட்டர்னென்ஸ் போடுகிறார்கள்

வெங்கடேஷ் ஒளிப்பதிவில் ஒரு ஹாலிவுட் தரம் தெரிகிறது. வந்தேபாரத் பைட் சீக்வென்ஸ்லாம் மேக்கிங்கில் வேறலெவல் சம்பவம். ஜிப்ரானி இசையில் பாடல்கள் BGM இரண்டுமே சூப்பர்

முதல்பாதியில் இருந்த நேர்த்தி இரண்டாம் பாதியில் ஜஸ்ட் மிஸ் ஆனாலும், க்ளைமாக்ஸை புத்திசாலித்தனமான திரைக்கதையால் வாவ் மொமெண்ட்ஸுக்கு கொண்டு வந்துவிட்டார் இயக்குநர். அண்ணாச்சி இந்தப்படத்தில் நடிகராக முழுதாக ஜெயிக்காவிட்டாலும், தயாரிப்பாளராக செம்மயாக ஜெயித்துவிட்டார். ஏன்னா TVK கூட்டத்தில் கேட்கிற விசில் சத்தம் லீடர் ஓடுற தியேட்டரிலும் கேட்குது
3.25/5