லிப்ரா குறும்பட விழாவில் பங்கேற்க வரும் சர்வதேச திரைப்பட ஜூரிக்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

ளனும் நந்தினி’யும் உட்பட சில படங்களைத் தயாரித்த நிறுவனம் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. அதையொட்டி அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக குறும்பட போட்டி ஒன்றை கடந்த நவ-29ல் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த குறும்பட போட்டியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரொடக்‌ஷன்ஸ். அந்த வகையில் போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.

இந்தநிலையில் தான் இந்த விழாவை வரும் ஜன-28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தப்போட்டியில் குறும்படங்கள் கலந்து கொள்ள இருகின்றன. அதுமட்டுமல்ல, சில சர்வதேச திரைப்பட நடுவர்(ஜூரி)களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதனால் இந்த குறும்பட விழா முன்னைவிட இன்னும் பிரமாண்டமாக, மற்ற குறும்பட விழாக்களுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.