மாயக்கூத்து- விமர்சனம்

மிகச்சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து மாயக்கூத்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்
R.ராகவேந்திரா. எப்படி இருக்கு படம்?
வாசன் என்ற எழுத்தாளர் தான் எழுதிய கேரக்டர்களை சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற யூனிக் கற்பனை தான் படத்தின் கதை..அதாவது பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி ஒரு உலகிற்குச் சென்று வந்தியத்தேவன், நந்தினி, பெரிய பழுவேட்டயர், ஆகியோரைச் சந்தித்தால் எப்படி இருக்கும்? நந்தினி தன் தரப்பு நியாயத்தைச் சொல்லி தன் கேரக்டரை மாத்தி எழுதச்சொன்னால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இந்தப் படத்தில் வரும் எழுத்தாளர் அவர் எழுதிய கேரக்டர்களைச் சந்திக்கிறார். இதில் சில கேரக்டர்கள் தங்கள் தரப்பை நெகட்டிவாகச் சித்தரித்திற்கு கோபப்படுவதும் உண்டு. ஆக ஒரு Interesting screenplay
நடிகர்களில் மறைந்த டெல்லி கணேஷ், சாய் தீனா, ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தவிர்த்து அனைவரும் புதிது. ஆனால் அசத்தியுள்ளனர்
சிறிய பட்ஜெட் படம் என்பதால் கேமராமேன் தன்னால் முடிந்த எல்லாச் சிறப்பான ஷாட்களையும் வைத்துள்ளார். இசை அமைப்பாளர் சோரம் போகாமல் இசைத்துள்ளார்
ஒரு நல்ல கதைக்கரு கிடைத்து விட்டால், அதை திரைக்கதை ஆக்குவதற்கு அதிகமாக மெனக்கெட்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம். சிற்சில குறைகள் படத்தில் இருந்தாலும் சிறு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் இந்த மாயக்கூத்து
3.5/5
-வெண்பா தமிழ்