செம ஸ்லிம்.. செம க்யூட்.. – அட நம்ம அனுஷ்காவா இது?

Get real time updates directly on you device, subscribe now.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக தனது உடல் எடையை சில கிலோ வரை கூட்டினார் அனுஷ்கா.

அந்தப் படத்துக்குப் பிறகு ஏற்றிய உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு போவது, டயட் இருப்பது என்று எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் உடல் எடை தான் குறைந்தபாடில்லை. சரி அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்று அங்கும் போனார். பைசா பிரயோசனமில்லை.

இதனால் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைப்பதும் குறைந்தது, அதோடு பலரும் அனுஷ்காவின் குண்டான உடல் அமைப்பைப் பார்த்து கிண்டல், கேலி செய்தனர். யோகா டீச்சரான தனக்கே இது பெரிய சவாலாக இருக்கிறதே என்று கவலைப்பட்டவர் இப்போது புது லுக்கில் உற்சாகமாக காட்சியளிக்கிறார்.

நெருங்கிய தோழிகள் சிலரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்திரியே சென்று அங்கு இயற்கை முறை சிகிச்சை எடுத்து உடல் எடையைக் குறைத்து செம க்யூட்டாக காட்சி தருகிறார்.

Related Posts
1 of 7

அனுஷ்கா ஒல்லியாக இருக்கும் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் எல்லோரும் அட நம்ம அனுஷ்காவா இது, செம ஸ்லிம்மா.. செம க்யூட்டா.. நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியப்படுகிறார்கள் ரசிகர்கள்.

அனுஷ்கா குண்டாக இருந்ததால் கேலி, கிண்டல்களுக்கு ஆளானார். கடைசி முயற்சியாக ஆஸ்திரியா சென்றவருக்கு நல்லது நடந்துள்ளது. ஒல்லியானது மட்டும் அல்ல கூடுதல் அழகாகவும் இருக்கிறார் அனுஷ்கா.

தற்போது ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் மாதவனும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா.