முதல்ல ‘பிரேமம்’ ; அப்புறம் தான் மத்ததெல்லாம் : மடோனா பிடிவாதம்

Get real time updates directly on you device, subscribe now.

madonna

லையாளத்தில் வசூலை அள்ளிய ‘பிரேமம்’ படத்தில் நடித்தவர் மடோனா செபாஸ்டியன்.

தமிழில் இவரை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் நலன் குமாரசாமி.

அந்தப்படம் ரிலீசாகி நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருப்பதால் தமிழில் அவரை கமிட் செய்ய ஆளாளுக்கு போட்டி போட்டு வந்தனர்.

Related Posts
1 of 68

இதற்கிடையே சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பதாக சொல்லப்படும் ‘கத்திச்சண்டை’ படத்தில் மடோனா தான் ஜோடியாக நடிக்கிறார் என்று செய்தி பரவியது.

அவரோடு பேச்சு வார்த்தை மட்டுமே நடந்து வந்த நிலையில் மலையாள மீடியா ஒன்று மடோனா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று உறுதியான செய்தியை வெளியிட்டு விட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் மடோனா.

‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நான் தான் நடிக்கிறேன். இப்போதைக்கு என் கைவசம் அந்த ஒரு படம் மட்டுமே இருக்கிறது. அது முடியும் வரை வேறு எந்தப் படத்தையும் கமிட் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. விஷால் ஜோடியாக நான் நடிப்பதாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று பிடிவாதமாக மறுத்திருக்கிறார் மடோனா.

பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கியேம்மா…