துவங்கியது “துப்பறிவாளன் 2”
மிஷ்கின் விஷால் கூட்டணி துப்பறிவாளன் படத்தில் இணைந்து நல்ல பெயரைச் சம்பாதித்தது. தற்போது அதே கூட்டணி அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் முதல்பாகத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், பாக்யராஜ் நடித்திருந்தார்கள். இப்படத்தை விஷால் ஃப்லிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று முதல் லண்டனில் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃப்லிம் ஃபேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் விஷால், பிரசன்னா, நாசர், கவுதமி, ரஹ்மான், சுரேஷ் சக்கர்வர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 40 நாட்கள் லண்டனில் நடைபெறவிருக்கிறது