ரிஸ்கையே படமாக எடுத்துள்ளோம் மண்டாடி குறித்து சூரி !
சமீபத்தில் சென்னை ட்ரேட் செண்டரில் நடைபெற்ற மண்டாடி படத்தின் இசை விழா பிரம்மாண்டமாக அமைந்தது. விழாவில் வெற்றிமாறன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், சூரி, மதிமாறன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சூரி பேசும்போது, “தான் இதுவரை வந்ததற்கும் இதற்கு மேல் போவதற்கும் காரணம் வெற்றிமாறன் தான்.
இந்தப் படத்துக்காக பல போராட்டங்களை சந்தித்தோம் நடுக்கடலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, அதன் பலனாக படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் தன்னிடம் 80 சதவிகிதம் படப்பிடிப்பு நீச்சல் குளத்தில் எடுத்து விடுவோம் என்றும், மீதி 20% தான் கடலில் படப்பிடிப்பு என்றார். ஆனால் இரண்டு மாதங்களாக கடலில் தான் படபிடிப்பு நடத்தப்பட்டது. வீட்டிற்கு வீடியோ காலில் தான் பேசினோம். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
நான் எந்த உயரத்துக்குப் போனாலும் அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் காரணம். அவர் போட்ட விதைதான் இப்போது செடியாக முளைத்திருக்கிறது” என்று நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், கடல் சார்ந்த சவாலான விளையாட்டு மற்றும் சண்டைக் காட்சிகளைக் கொண்ட இந்த ‘மண்டாடி’ திரைப்படத்திற்காக படக்குழுவினர் வெறும் காட்சிகளுக்காக ரிஸ்க் எடுக்கவில்லை, மாறாக அந்த ரிஸ்கையே ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள் என்று கூறிய சூரி, மண்டாடி நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும்” என்பதை அழுத்தமாக கூறினார்.