காதலர் தினத்தில் ஓ மை கடவுளே!
காதல் என்ற மேட்டரை கையில் எடுத்தால் ஒரு கிலோ முதல் போட்டா கால்கிலோவாவது கையில் வந்திடும் என்பது சினிமாக்காரர்களின் நம்பிக்கை. ஏன்னா இன்னைக்கு 80-கிட்ஸ் 90 கிட்ஸை விட 2K கிட்ஸ் தான் அதிகமா தியேட்டருக்கு வர்றாங்க. அதனால் தான் அசோக்செல்வன் ரித்திகா, வாணி போஜன் நடிப்பில் ஓ மை கடவுளே என்ற படம் தயாராகியுள்ளது. அஷ்வத் எழுதி இயக்கியுள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
நேற்று இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹீரோ,ஹீரோயின்,இயக்குநர், தயாரிப்பாளர் உள்பட படக்குழு மொத்தமும் கலந்து கொண்டன.