‘மாஸ்’ பக்கா மாஸ்… : வெங்கட்பிரபுவை மாற்றிய சூர்யா!
வெங்கட்பிரபு படம் என்றாலே அதில் ‘தம்மு’, ‘தண்ணி’, ‘ஐயிட்டம் சாங்’ என மசாலா சமாச்சாரங்கள் கொட்டிக் கிடக்கும்.
ஆனால் அப்படி எந்த ஒரு கன்றாவிகளும் இல்லாமல் முதல் தடவையாக குழந்தைகளும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.
அந்தப்படம் தான் சூர்யாவின் ‘மாஸ்’.
இந்த ஆச்சரியச் செய்தியை நேற்று அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன போது எல்லோரும் புருவம் உயர்த்தினார்கள்.
அதற்கு விளக்கம் கொடுத்த வெங்கட்பிரபு “சூர்யா சார் எங்கிட்ட இது குழந்தைகளும் பார்த்து ரசிக்கிற மாதிரியான ஒரு படமா இருக்கணும்னு சொன்னார். அதனால படத்துல அவங்களுக்குன்னே சில காட்சிகளை வெச்சோம். அதையெல்லாம் கண்டிப்பா குழந்தைங்க ரசிப்பாங்க. என்னோட படங்கள்ல தம்மு, தண்ணியடிக்கிற சீன்கள், ஐயிட்டம் சாங் எல்லாம் இருக்கும். ஆனால் இந்தப்படத்துல அந்த மாதிரி எதுவுமே இல்ல. முதல்தடவையா சூர்யா சாருக்காக நான் இந்தப் படத்தை பண்ணிருக்கேன்.” என்றவர் சூர்யாவைப் பற்றி பேசினார்…
”நான் சூர்யா சார் எல்லோருமே ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். இருந்தாலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப அமைதியா இருப்பார், கொஞ்சம் கேப் கெடைச்சாலும் கேரவனுக்குள்ள போய் இருந்துப்பார்ன்னு சொன்னாங்க. ஆனா எங்க ஸ்பாட்ல அவர் எப்பவுமே எங்க கூட தான் இருந்தார். சிரிச்சுப் பேசி, அரட்டையடிச்சுட்டு சந்தோஷமா ஷூட்டிங் போச்சு” என்றார்.
தயாரிப்பாளர் ஆகி விட்டதாலோ என்னவோ நெத்தியடி பதிலைத் தந்தார் சூர்யா.
”இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல நான் கேரவனுக்குள்ள போகாததுக்கு காரணம் வெங்கட்பிரபு டீம் ஷூட்டிங் எடுத்த விதம் தான். ரொம்ப ஜாலியா ஷூட்டிங் எடுத்துக்கிட்டிருந்தாங்க. இவங்க படம் தான் எடுக்கிறாங்களா இல்லேன்னா டைம் பாஸ் பண்றாங்களான்னு எனக்கு தோணுச்சு அதனால தான் அவங்க பக்கத்துலேயே இருந்தேன் என்றார்.
அதானே பணத்தை போடுற தயாரிப்பாளருக்குத்தானே அதோட வலி தெரியும். ஹாட்ஸ் ஆப் சூர்யா!