“மழை பிடிக்காத மனிதன்” படத்தில் டப்பிங் பேசிய’நகுல்’!

Get real time updates directly on you device, subscribe now.

கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பரின் காட்சிகளுக்கு, பன்முக திறமை கொண்ட நடிகர் நகுல் தமிழில் டப்பிங் செய்துள்ளார்.

Related Posts
1 of 4

தமிழ் சினிமாவின் பன்முக நடிகரான நடிகர் நகுல், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு என எந்த ஒரு அரங்கிலும் தனது திறனை வெளிக்கொண்டுவர தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைக்கதைகள், அவர் கதாப்பாத்திரத்திற்காக தரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.