சாமானியன்- விமர்சனம்
மீண்டும் ஒரு பேங்க் சம்பந்தப்பட்ட கதை
தன் நண்பர்கள் இருவரோடு இணைந்து ராமராஜன் ஒரு பேங்க்-ஐ தன் கைக்குள் கொண்டு வருகிறார். அதற்கான காரணத்தை பின் கதையில் சொல்கிறார் இயக்குநர்.
கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ராமராஜன் இப்படத்தில் கிராமத்தில் இருந்து வந்து ஒரு வங்கியை ஹைஜாக் செய்கிறார். அதில் வெற்றிக்கொடியை நாட்டினாரா என்பதாக கதை விரிகிறது
கிராமிய நாயகனான ராமராஜன் இப்படத்தில் சீரியஸ் பாத்திரம் ஏற்றுள்ளார். கூடுமான வரை நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். பாவம் அவரின் உடல் அதற்கு முழுதாக ஒத்துழைக்கவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் தனது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ராதாரவி கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இப்படத்தில் முழுதாக கோட்டைவிட்டுள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் துளிகூட சுரத்தில்லை. ராமராஜனுக்கு இசையமைத்த பழைய இளையராஜா பாடல்கள் இன்றும் நீங்காமல் நினைவில் நிற்கிறது. ஒளிப்பதிவில் பெரிய குறையில்லை
சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் ஐடியா இந்த சாமானியனிலும் தெரிகிறது. இன்னும் முயற்சித்து சிறந்த திரைக்கதை அமைத்திருக்கலாம். அசாதாரணமான விசயத்தை சாமானியனை விட்டு டீல் பண்ணிய ஐடியாவை மிகவும் சாதாரணமாக எடுத்ததால் படம் மிக மிக சாதாரணமாக போய்விட்டது
2/5