பத்தா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

விஜய் ரசிகர்கள் போட்டுப்பிளக்க காத்திருக்கும் சமயத்தில் வெளியாகியுள்ளது பத்தா. எப்படி இருக்கு படம்?

1986-ல் நடக்கும் கதை! சிறுவயது சாய் விளையாட்டுப் பொருட்களின் காதலன். அவன் ஒருமுறை விஜய்சேதுபதியின் அதிரடியான ரவுடியிசத்தைப் பார்த்துப் பயந்துவிடுகிறான். ஒருமுறை தன் விளையாட்டுப் பொருள் ஒன்று ஆசிரியர் ஒருவரால் பள்ளிக்கூட ஸ்டோர் ரூமில் பூட்டி வைக்கப்படுகிறது. இன்றே எடுக்காவிட்டால் தொடர்விடுமுறையில் பொருள் கிடைக்காமல் போய்விடும் என சாய் விளையாட்டுப் பொருளை எடுக்க ஓடுகிறான். அங்கு நடக்கும் ஒரு சம்பவம் விஜய்சேதுபதியை லாக் செய்துவிடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை!

விஜய்சேதுபதி தனது நல்ல நடிப்பை தனித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார். டார்க் வகை காமெடி ஹீரோயிசம் என மிரட்டியுள்ளார். லிஜோமோல் ஜோஸ் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் சாய் இந்த வருடத்தில் பல விருதுகளை நிச்சயமாக தட்டிச்செல்வான்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செல்லமே மகளே பாடல் மூலம் கவனிக்க வைக்கிறார். பின்னணி இசையில் கைத்தட்ட வைக்கிறார்..செல்வகுமார் எஸ்.கே சிறப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்

திரைக்கதையைப் பொறுத்தவரை நல்ல பாசிட்டிவ் வைப் இருக்கிறது. வாட் நெக்ஸ்ட் என்ற எதிர்பார்ப்பும் கதையோடு கலந்த காமெடியும் படத்தை ரசிக்க வைக்கிறது. விஜய் சேதுபதிக்கு நிச்சயமாக இந்தப் பத்தா கெத்தாக துணை நிற்கும்
3.5/5