இதுவும் ஹாரர் படம் தான் ஆனால்..? – புத்தம் புதுசா மிரட்ட வரும் ‘மோகினி’ த்ரிஷா!
தமிழ்சினிமாவில் ஹாரர் படங்களுக்கென்றே சில அடையாளங்கள் உண்டு. தனியாக ஒரு பங்களா இருக்கும். அதற்குள் ஒரு குடும்பம் குடி போகும். அங்கே ஏற்கனவே ஒரு பேய் குடியிருக்கும். அதனிடமிருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது? என்ற அடையாளம் போல, இன்னும் சில அடையாளங்களையும் சுட்டிக் காட்டலாம்.
ஆனால் நான் ஹாரர் படம் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்த உடனே இது போன்ற வழக்கமான அடையாளங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டே மோகினியை டிசைன் செய்தேன் என்கிறார் இயக்குநர் ஆர்.மாதேஷ்.
ஆமாம், லண்டன், பாங்காங் என முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் த்ரிஷா.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் பற்றி இயக்குனர் ஆர். மாதேஷ் மேலும் கூறியிருப்பதாவது…
என்னுடைய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. ஹாரர் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. “காதலன்” படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபுதேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன.
படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இனைத்து கொள்ள முடியும். படத்தல் பூர்னிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் “பன்னீர் புஷ்பங்கள்” சுரஷே் போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் லஷ்மண் குமார் படத்தை முடித்து போட்டுப் பார்த்த போது 10 மடங்கு சிறப்பாகவும், திருப்தியாகவும் வந்துள்ளது என்றார்.
மேலும் ‘இந்தப் படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைக்களம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விஷூவல் எபெக்ட்ஸ் மிக அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிகப்பெரிய பலம்” என்றார்.