’96’ தெலுங்கு ரீமேக் – த்ரிஷாவோடு போட்டி போடும் சமந்தா!
விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியான படம் ’96’.
பள்ளிப்பருவக் காதலை மிகவும் யதார்த்தமாகச் சொன்ன இந்தப்படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
அங்கு ஹீரோவாக சர்வானந்த் நடிக்க இருக்கிறார். ஆனால் நாயகியாக தமிழில் நடித்த த்ரிஷாவே நடிக்கிறாரா? என்பதில் தான் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் சமந்தா தான். இந்தப் படத்தில் தான் எப்படியாவது நாயகியாக நடித்து விட வேண்டுமென்று த்ரிஷாவோடு கடுமையாக போட்டி போட்டு வருகிறாராம் சமந்தா. ஆனால் தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கிலும் இயக்குவதால், நாயகியாகும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு தான் அதிகம் இருக்கும் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரம்.