மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படம் – அதிரடியான ஆக்சன் காட்சிகள்- புராண கதைகள் மற்றும் மல்டிவெர்ஸ் சூழலுடன் இணைந்திருக்கும் என உறுதி அளித்திருக்கும்.’மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் படத்தைப் பற்றிய மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் பிரபஞ்சங்களின் பல்வேறு அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் – பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

அறிமுக படைப்பாளிகளான ஆனந்த் எஸ் ராஜ் மற்றும் நிதி ராஜ் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல கதாசிரியர் அனீஸ் ராஜசேகரனும் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். இந்த திரைப்படம் இந்தாண்டு திரையில் வெளியாக உள்ளது.

இதனிடையே நிவின்பாலியின் அண்மைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் ‘மல்டிவெர்ஸ் மன்மதன் ‘ படத்தை பற்றிய அப்டேட்டுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.‌