நிவின்பாலியுடன் இணைந்த சூரி!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 11

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். “ரிச்சி” படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார்.