பிரியதர்ஷனை பிரிந்து விட்டேன்; இறைவனுக்கு நன்றி : நடிகை லிஸ்ஸி அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

lyssy1

இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து பல ஆண்டுகளுக்கும் மேல் எந்தவித உரசலும் இல்லாமல் வாழ்ந்து வந்த நடிகை லிஸ்ஸி சில மாதங்களுக்கு முன்பு மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தில் கோரினார்.

அதனடிப்படையில் இன்று டைரக்டர் பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டு விட்டோம் என்று அறிக்கை விட்டிருக்கிறார் நடிகை லிஸ்ஸி. (எதெதெற்கெல்லாம் பத்திரிகை செய்தி அனுப்புவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.)

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் – சுசேன், திலீப் – மஞ்சு, விஜய் – அமலாபால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன்.

அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தலையீட்டு வரை என்னை கடுமையாக காடுமிராண்டி தனத்துடனேயே என்னை அணுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன்.

இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் காதலும், பாசத்திற்க்கும் என்றும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.