ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘மைசா’வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மைசா’ திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர்.
இந்த வீடியோவில், ‘மைசா’வின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தைப்பற்றிய ஒரு விறுவிறுப்பான பார்வை இடம்பெறுகிறது. மேலும் இந்த காணொளி, கதாநாயகியின் தாயின் சக்திவாய்ந்த பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, உலகத்தைப்பார்தது “அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள — மைசா” என்று உரக்க வலியுறுத்துகிறார்.
இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா, தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் துணிச்சலான மற்றும் வன்முறை நிறைந்த நடிப்பை வழங்கியுள்ளார். இயல்பான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில், அவர் தலைப்புக்கான கதாபாத்திரத்தை வியக்க வைக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறார். டீசரின் இறுதித் தருணங்களில் அவர் எழுப்பும் கர்ஜனை, ‘மைசா’வின் கட்டுக்கடங்காத கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது.