விழுந்தது 3-வது விக்கெட் : விக்னேஷ் சிவனையும் கழட்டி விட்டார் நயன்தாரா?!

Get real time updates directly on you device, subscribe now.

nayan1

டப்பாறையை நடுவில் போட்டாலும் சர்ச்சையையும், நயன்தாராவையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது.

30 வயதை தாண்டிய போதும் இப்போதுள்ள இளம் நடிகைகளுடன் சரிக்கு சமமாக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நயன்தாராவைப் பற்றி அவ்வப்போது வருவது அவரது காதல் சமாச்சாரங்கள் பற்றிய பரபரப்புகள் தான்.

ஒரு டைமிங்கில் சிம்பு, பிரபுதேவா இருவருடனும் ஒட்டி உறவாடியவர் திடீரென்று அவர்கள் உடனான உறவை முழுவதுமாக அடுத்தடுத்து துண்டித்து விட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

”சரி புள்ள திருந்திடுச்சி போல…” என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்த நேரத்தில் தான் ”நானும் ரவுடி தான்” பட இயக்குநர் விக்னேஷ் சிவன் நயனிடம் மனசை பறிகொடுத்த சமாச்சாரம் வெளியே வர ஆரம்பித்தது.

எப்போதுமே நயன்தாரா மீடியாக்களை சந்திப்பது இல்லை. இதனால் அந்த கனி ரசம் சொட்டும் காதல் தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டும் ”நாங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ்” அம்புட்டுத்தான் என்று மறுத்து வந்தார்.

Related Posts
1 of 41

ஆனால் தனது அடுத்த படத்திலும் நயன்தாராவையே கதாநாயகியாக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்த நிலையில் உருக உருக காதலித்த விக்னேஷ் சிவனையும் நயன்தாரா கழட்டி விட்டு விட்டதாக புதிய தகவல் கசிந்திருக்கிறது.

நயனின் சம்பளம் சமீபத்தில் கோடிகளில் எகிறி விட்டாலும் அவரைத் தேடி வருகிற புதுப்பட வாய்ப்புகள் குறைந்தபாடில்லை.

இதனால் இனி முழு நேரம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று முடிவெடுத்ததன் விளைவே விக்னேஷ் சிவனை நயன்தாரா கழட்டி விடக் காரணம் என்கிறார்கள் கோலிவுட்டில்!

அப்போ, விழுந்துடுச்சு ”விக்கெட் நம்பர் 3”