எதையும் சந்திக்க தயார் : மகனுக்காக மல்லுக்கட்டும் டெல்லி கணேஷ்

Get real time updates directly on you device, subscribe now.

ennul

வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ ஆனால் அறிமுகம் மட்டும் நின்றபாடில்லை.

ஏற்கனவே சில வாரிசு நடிகர்கள் சினிமாவில் போராடி வருகின்ற நிலையில் தனது ஒரே மகன் மகாவையும் ஹீரோவாக களமிறக்கியிருக்கிறார் மூத்த நடிகர் டெல்லி கணேஷ்.

”என்னுள் ஆயிரம்” என்ற டைட்டிலோடு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி ரிலீசாகப்போகும் இப்படத்தை ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார்.

எனக்கு ஒரே பையன். நல்லா படிப்பான். படிப்பை முடிச்சுட்டி ஏதாவது வேலைக்கு போவான்னு பார்த்தா அப்பா எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசைன்னு சொன்னான்.

அப்புறமென்ன அமெரிக்காவுல படிச்சிக்கிட்டி இருந்தவனை படிப்பை முடிச்ச கையோட நேரா சென்னைக்கு வரச் சொல்லிட்டேன். இதுவரைக்கும் நான் தியேட்டர்ல போய் படம் பார்த்ததே

இல்லை. நான் நடிச்ச படங்களை கூட பார்த்ததில்லை. அதனால என்கிட்ட யார் என்ன கதை சொன்னாலும் அது எனக்கு புதுசாத்தான் தெரியும்.

Related Posts
1 of 2

இந்தப் படத்தோட டைரக்டர் கிருஷ்ணகுமார் என்கிட்ட கதை சொல்ல வந்தப்போ நான் வீட்ல இல்லை. என் பையன் தான் இருந்தான். அவர்கிட்ட கதை சொல்லியிருக்கிறார். தன்னோட முதல்

படமா இந்தக் கதை வந்தால் நல்லாயிருக்கும்னு சொன்னார்.

பல தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனா அவங்க ஒரு டைரக்டரை சொன்னாங்க. ஆனால் என் மகன் என்னோட முதல் படத்தோட டைரக்டர் இவர்தான்னு சொன்னதால சொந்தமா படத்தை தயாரிச்சுட்டேன்.

ஒரு அப்பாவா அவனோட ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமைதானே என்றவர் இந்தப்படம் ஓடினால் அடுத்ததா ஒரு படம் தயாரிப்பேன். ஓடாவிட்டாலும் அதனால வர்ற இழப்பை சந்திக்கத் தயாராகத்தான் வந்திருக்கேன். சினிமாவைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கேன் என்றார்.

ஹீரோ மகாவோட மனசுக்குள்ள ஆயிரம் கனவுகள் இருக்கும். அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறியதா? இல்லையாங்கிறது தான் படத்தோட திரைக்கதை. ரொம்ப இளமையா, ஃபேமிலியோட உட்கார்ந்து ரசிக்கிற மாதிரி நல்ல படமா வந்திருக்கு என்றார் இயக்குநர் கிருஷ்ணகுமார்.

ஆயிரம் கனவுகளில் மகாவின் ஹீரோவாக ஜெயிக்கிற கனவு மட்டுமாவது நிறைவேறட்டும்!