எவ்வளவு முக்கினாலும் நடக்காது… : சிம்புவை நட்டாத்தில் விட்ட நயன்தாரா!

‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ ரஜினி பேசுகிற இந்த பஞ்ச் சிம்பு நடிக்கின்ற படங்களுக்கு மட்டும் தான் சரியாகப் பொருந்தும்.
சிம்புவின் சமீபகால படங்கள் ரிலீஸ் நேர சர்ச்சையில் சிக்காமல் ரிலீஸ் ஆனதில்லை. அதிலும் ‘வாலு’ படமெல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆன கதை திரையுலகமும் சிம்புவின் ரசிகர்களும் அறியாததல்ல….
பிரச்சனை செய்யாமலேயே வாலு ரிலீசில் சிக்கலை சந்திக்க, இப்போது போதாக்குறைக்கு பீப் சாங் விவகாரத்திலும் சிம்புவின் பெயர் டேமாஜிக் கிடக்கிறது.
அது அவருக்கு மட்டும் டேமேஜ் அல்ல, அவர் சொந்தமாக தயாரித்து நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் சேர்த்து டேமேஜ் செய்திருப்பது தான் காலக்கொடுமை.
முன்னதாக இந்தப்படம் வருமா? வராதா? என்கிற சந்தேகம் இருந்த நிலையில் தேணான்டாள் பிலிம்ஸ் கைக்குப் போனவுடன் ”அப்பாடா” வானது சிம்பு வட்டாராம்.
ஆனால் இப்போது பெரிய கைக்கு சென்றும் படம் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போகிறது.
‘வல்லவன்’ படத்துக்குப் பிறகு சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்திருக்கும் படமென்பதால் சிம்பு ரசிகர்களும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் பாண்டிராஜூம் படத்தை ஒரு வருடத்துக்கு முன்பாகவே முடித்துக் கொடுத்து விட்டார். அப்படி இருந்தும் பிசினஸுக்காக ஒரே ஒரு குத்தாட்டப் பாடலால் பட ரிலீஸ் தள்ளிப் போக ஆரம்பித்திருக்கிறது.
இதில் ஆடுவதற்காக நயன்தாராவை கூப்பிட்ட போது ஏற்கனவே கொடுத்த கால்ஷூட்டை முழுமையாக வீணடித்ததால் வர மறுத்து விட்டார். சிம்புவும் விடாமல் திரும்ப திரும்ப கெஞ்சுப் பார்த்தும் சிம்புவின் வேண்டுகோளை ஒரு பொருட்டாக மதிக்காமல் போய் விட்டார் நயன்.
சிம்புவின் காத்திருப்பும் ”எவ்வளவு முக்கினாலும் நடக்காது…” கதையாகி விட, இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்த சிம்பு இப்போது அடா சர்மாவை கமிட் செய்திருக்கிறார்.
இவர் படத்தில் சிம்புவின் முன்னாள் காதலியாகவும், மாமன் வெயிட்டிங் பாடலுக்கு குத்தாட்டமும் போடுகிறார். இது முடியவும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
அந்த தேதியாவது கரெக்ட்டா இருக்கட்டும்!