வழக்கமான காதல் கதை தான்; அதிலும் புதுமை இருக்கும்! : பியா பாஜ்பாய்யோடு தமிழுக்கு வரும் மலையாள ஹீரோ
தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும், மனசை உருக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘அபியும் அனுவும்’ இப்படிப்பட்ட படம் தான் என்றாலும் இது வழக்கமான காதல் கதையாக இருக்காது என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் பி.ஆர் விஜயலட்சுமி.
இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அபியும் அணுவும்’ படத்தை குறித்து இயக்குனர் பி.ஆர் விஜயலட்சுமி பேசுகையில், ” இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகும் போது ரசிகர்கள் அறிவார்கள்.
மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.