தயாரிப்பாளர் ஆகிறார் நயன்தாரா! : கொடுத்து வெச்ச விக்னேஷ் சிவன்

Get real time updates directly on you device, subscribe now.

NAYANTHARA1

”அவங்க மனசு யாருக்கு வரும்?”

நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்று கேட்டால் அவரைப்பற்றி அங்கு இருப்பவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்.

மீடியாக்களில் நயன்தாராவைப் பற்றி வருகிற செய்திகள் வேறு. ஆனால் நிஜத்தில் அவரைப்பற்றி புகழ்ந்து பேசுபவர்களே அதிகம்.

அந்தளவுக்கு உதவிகள் செய்வதில் பாரபட்சம் காட்டாதவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தான் சென்னையில் இல்லாவிட்டாலும் ஒரு மலையாள பத்திரிகையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவிகளை செய்தார்.

அந்தளவுக்கு இரக்க குணம் கொண்டவர் தனது காதலர் ஒரு சிக்கலில் மாட்டுகிறார் என்றால் சும்மா இருப்பாரா?

‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநரும் நயனின் காதலருமான(?) விக்னேஷ் சிவனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. மீண்டும் விஜய் சேதுபதியை வைத்தே அவர் இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வருகின்ற நிலையில் இப்போது அவருக்காக சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம் நயன்.

Related Posts
1 of 14

அதற்கும் காரணம் இருக்கிறது.

நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும்- நயன் தாராவும் ரொமான்சில் ஈடுபட்ட விவகாரம் தனுஷ் காதுகளுக்கு போகவும் யாரு காசுல யாரு ரொமான்ஸ் பண்றது என்று கடுப்பாகி விட்டார் தனுஷ். அத்தோடு இறுதி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு பணமும் கொடுக்காமல் நிறுத்தி விடுகிற லெவலுக்கு பிரச்சனையாகி விட்டது.

அந்த இக்கட்டான நேரத்தில் நயன்தாரா தான் அந்த இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை கொடுத்து படப்பிடிப்பு முடிய உதவி செய்ததாக அப்போது கூறப்பட்டது.

அப்படி ஒரு இக்கட்டான நிலைமை விக்னேஷ் சிவனின் புதுப்படத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்ததால் நயன்தாராவே தயாரிப்பாளராகி விடும் முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள்.

டார்ச்சர் பண்ணின சிம்புவுக்கே அள்ளிக்கொடுத்த நயன், உண்மையாக காதலிக்கும் விக்னேஷ் சிவனுக்கு இதைக்கூட செய்ய மாட்டாரா என்ன?

கண்டிப்பா செய்வார்…