சிவகார்த்திகேயன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன்! – என்ன காரணம் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

‘வேலைக்காரன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கப் போகும்13-வது படத்தை இயக்குகிறார் எம்.ராஜேஷ்.

கே.ஈ ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோக்ரீன் சார்பில் புரொடக்‌ஷன் நம்பர் 9 ஆக தயாரிக்கும் இப்படம் மே 2-ம் தேதி பூஜையுடன் துவங்கியது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்துக்கு இப்போதைக்கு #SK13 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தை டைரக்டர் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் எம்.ராஜேஷ் வந்திருக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தோல்வி தான் விக்னேஷ் சிவன் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Related Posts
1 of 34

தற்போது புதுப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் காதலி நயன் தாராவுடன் கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

#SK13 படத்தை பற்றி தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை.

மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன்.

மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர்.

எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.