பார்க்கிங் தயாரிப்பாளரின் அடுத்தபடம்

Get real time updates directly on you device, subscribe now.

 

தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின் மூலம் பிரபலமான இளம் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார், பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். – பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்!

Related Posts
1 of 2,336

‘பார்க்கிங்’, ‘TTT’ உள்ளிட்ட பாராட்டுப் பெற்ற திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த பிராத்தனா நாதன், தற்போது ‘நின்ஜா’ (Ninja) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற தேஜு அஸ்வினி, அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ (Super Hero) திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி (Soldiers Factory) நிறுவனம், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) நிறுவனத்துடன் இணைந்து புதிய தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படத்தை தயாரிக்கிறது. ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார். பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.