‘நிராயுதம்’ படத்திற்காக அரை நிர்வாண கோலத்தில் நின்ற சாரிகா!
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு ‘நிராயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – சரவணகுமார், இசை – கனி, எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.பி. ராஜதுரை.
படம் பற்றி இயக்குனர் எம்.பி. ராஜதுறையிடம் கேட்டோம்…
கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர்வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை முடிந்து நடுஇரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான். கண்விழித்து பார்க்கும்போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை உணர்கிறாள்.
அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும்போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.
அரைகுறை ஆடையுடன் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை! ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர்.