நூடுல்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Two மினிட்ஸ்ல டைனிங்க்கு வரக்கூடிய Food தான் நூடூல்ஸ். இதைமாதிரி லைப்லயும் சில சம்பவங்கள் two மினிட்ல லைபையே மாற்றும். இதன் அடிப்படையில் தான் இந்தப் படத்தின் கதை. ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட ஒரு அப்பார்ட்மெண்ட் பேமிலி மொத்தமும் வீக் end-ல் மொட்டை மாடியில் பாட்டுப்பாடி விளையாடுறார்கள். அந்த நேரம் அந்த ஏரியாவில் ரவுண்ட்ஸ் வருகிறார் இன்ஸ்பெக்டர் அருவி மதன். இந்த பேமிலிக்கும் அருவி மதனுக்கும் சின்ன முட்டலும் மோதலும் நடக்க, அதைத் தொடர்ந்து நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம் மூலமாக அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஏற்படும் அதிர்ச்சிகளும் அதில் இருந்து அவர்கள் மீள்வதும் தான் இப்படத்தின் முழுக்கதையும். இந்த முழுக்கதைக்குள் இருக்கும் சில ட்விஸ்ட்கள் இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது என்பது இந்தப் படத்தோட முதல் பாசிட்டிவ்

கதையோட மூட்-ஐ உணர்ந்து அளந்து நடிக்க வேண்டிய கட்டாயம் அனைத்து நடிகர்களுக்கும். அனைவருமே பின்னியிருக்கிறார்கள். ஹரிஷ் உத்தமன் பதட்டப்படும் காட்சிகளிலும் கெஞ்சும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்பத்தின் இல்லத்தரசியாக ஷீலா ராஜ்குமார் மிகச்சரியான தேர்வு. தன் அம்மா அப்பா வர்றாங்க என்ற தகவலை கேட்கும் போதும், கணவனோட சுயமரியாதைக்கு பங்கம் வராமல் நடந்துகொள்ளும் போதும் அசத்துகிறார். இந்தப்படத்தின் வில்லனும் இயக்குநருமான அருவி மதன் நடிப்பை அருவி மாதிரி கொட்டியிருக்கிறார். அவர் காட்டும் அதிகாரத்தின் கோரமுகம் திரையில் அப்படியே பிரதிபலித்துள்ளது. மேலும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிகர் இடைவேளைக்குப் பிறகான படத்தை தாங்குபவரான வசந்த் மாரிமுத்து. ஒரு நார்மலான லாயர் கேரக்டரில் மனிதர் வெளுத்துள்ளார். படம் சிறிய வட்டத்திற்குள் சுழல்வதால் நடித்துள்ள அனைவருமே முத்திரை பதிக்க்கிறார்கள்

பின்னணி இசை சின்னதாக திரில்லிங்-ஐ ஏற்படுத்துகிறது. படத்தின் ஒளிப்பதிவில் பட்ஜெட் தெரிந்தாலும் அது சப்ஜெக்டை பாதிக்கவில்லை

அதிகாரத்திற்கும் சுயமரியாதைக்குமான மோதலை முன்வைத்து துவங்கும் படம் முதல் பத்து நிமிடத்திலே நம்மை நிமர்ந்து உட்கார வைக்கிறது. சின்னச் சின்ன கேரக்டர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமாகவும் திரைக்கதையை அழுத்தமாக நகர்த்துவது என ரைட்டிங்-ஆக ரொம்பவே மெச்சூட் ஆக இருக்கிறது படம். மளிகைக் கடைக்காரர் கேரக்டர், ஹெட் கான்ஸ்டபிள் கேரக்டர் ரொம்பவே சரியா யூஸ் பண்ணப்பட்டிருக்கிறது

ரொம்பவே சின்ன வட்டத்திற்குள் போடப்படும் திட்டம் என்பதால் சில இடங்களில் படம் பார்வையாளர்களை சஞ்சலப்படுத்துகிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அது எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது. டைட்டிலுக்கு ஏற்றாப்போல நமது நேரத்தை வீணடிக்காத படம் என்பதால் இந்த நூடுல்ஸ் சாப்பிட உகந்ததே
3/5