சர்வதேச பட விழாவில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற ”ஒரு கிடாயின் கருணை மனு”

Get real time updates directly on you device, subscribe now.

oru-kidayin

நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஈரோஸ் நிறுவனம் தயாரித்த, விதார்த் நடித்த, புதிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கிய “ஒரு கிடாயின் கருணை மனு” திரைப் படத்துக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது.

Related Posts
1 of 2

படத்தை பார்த்த இந்திய வம்ச வழியினர் இந்தப் படம் இந்திய திரைப்படதுறைக்கு சர்வதேச அளவில் தரமான படங்கள் தர வல்லமை மிகுந்தது என மிகப் பெரிய பெயர் ஈட்டி தரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் சார்ந்த “ஒரு கிடாயின் கருணை மனு” தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த சர்வதேச படக் குழுவினரும் தெரிவித்தனர். படப்புடிப்பு குழுவினரை பாராட்டிய விழாக் குழுவினர் ‘இத்தகைய நேர்த்தியம், கள்ளம் கபடம் இல்லாத நகைச்சுவையும் தமிழக ரசிகர்களை மட்டுமின்றி எல்லோரையும் வசிக்கும் வல்லமை உடையது
என பாராட்டினர்” என பெருமையுடன் கூறினார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தை சார்ந்த சாகர்.