‘விவேகம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் : ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸ்
எப்போது வரும் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘விவேகம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் தொழில்நுட்ப வேலைகளை முடிந்ததையடுத்து அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் அந்தச் செய்தி உறுதியாகவில்லை. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் குழப்பத்தோடு இருந்தனர்.
முன்னதாக ‘விவேகம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீசாகும் என்றும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இன்று சென்சார் செய்யப்பட்ட ‘விவேகம்’ படத்துக்கு தணிக்கைக்குழு சார்பில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. சென்சார் முடிந்ததையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்தபடி உலகம் முழுவதும் ஆகஸ்ட் 24-ம் தேதி ‘விவேகம்’ படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விவேகம்’ ரிலீஸ் தேதி உறுதியானதையடுத்து அப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த பல திரைப்படங்கள் ஆகஸ்ட் 4, 11, 18 ஆகிய தேதிகளில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.