விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பொய்யின்றி அமையாது உலகு’ பட ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பொய்யின்றி அமையாது உலகு’. இதில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்ஷி அகர்வால்,ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.