பொய்க்கால் குதிரை- விமர்சனம்
மகளின் மருத்துவச் செலவிற்காக ஒற்றைக்காலுடன் போராடும் ஒரு தந்தையின் கதை
ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்யும் பிரபுதேவாவிற்கு தன் மகள் என்றால் உயிர். அந்த மகளுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை வருகிறது. அதை நிவர்த்தி செய்ய 70 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பிரபுதேவாவிற்கு அந்தப்பணத்தைப் பெற பிரகாஷ்ராஜ் ஒரு கடத்தல் ஐடியா கொடுக்கிறார். அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் தான் படத்தின் கதை
ஒற்றைக்கால் சவால் கொண்டவராக பிரபுதேவா நடித்துள்ளார். நிறைய இடங்களில் அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி. பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் குட்டிப்பெண்ணும் அழகாக நடித்திருக்கிறார். வரலெட்சுமி, நண்டு ஜெகன் உள்பட அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளனர்
டி.இமானின் பின்னணி இசை படத்தின் எமோஷ்னல் ஏரியாக்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறது. மற்றபடி ஏமாற்றமே. சிங்கிளு என்ற பாடல் மட்டும் ஓ.கே ரகம். படத்தின் ஒளிப்பதிவு டார்க் காட்சிகளில் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது
இரண்டு மணி நேரப்படம் தான் என்றாலும் சில தேவையற்ற காட்சிகள் அலுப்பைத் தருகின்றன. கண்களை பொங்க வைக்கும் தருணங்கள் இருந்தும் அதைச் சரியாக கன்வே பண்ண தடுமாறியிருக்கிறார் இயக்கு சன்தோஷ் பி ஜெயக்குமார். கடைசி 15 நிமிடப்படம் தான் மீதுமுள்ள நேரத்தை ஓரளவு காப்பாற்றியுள்ளது. ரைட்டிங் & மேக்கிங் இரண்டிலும் நாலுகால் பாய்ச்சலில் சென்றிருந்தால் பொய்க்கால் குதிரை தப்பித்திருக்கும்
2.75/5