சினிமா ஸ்ட்ரைக்கை உடைக்க சதியா? – ரஜினி மீது தயாரிப்பாளர்கள் புகார்!

Get real time updates directly on you device, subscribe now.

டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான தமிழ்த்திரையுலகின் ஸ்டிரைக் ஒரு மாதத்தை எட்டியிருக்கிறது. இதனால் சினிமாவை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இதனாலேயே போராட்டத்தை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் கோலிவுட்டில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. மூத்த நடிகர்களான கமல், ரஜினி இருவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசிய விஷால் இந்தப் போராட்டம் எதற்காக? யாருக்கு எதிராக? என்பது குறித்தெல்லாம் விளக்கம் கொடுத்து விட்டு வந்தார்.

”இருந்தாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், அதனால் சீக்கிரமே போராட்டத்தை முடித்து விடுங்கள்” என்று அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால் ரஜினியோ ”எனக்கு வேலை நிறுத்தமே பிடிக்காது” என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

ரஜினியின் அந்த வெளிப்படையான விமர்சனத்துக்கு பின்னணியில் வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிக்கும் அவருடைய காலா உள்ளிட்ட புதுப் படங்கள் தான் காரணம் என்கிறார்கள்.

தொடரும் ஸ்ட்ரைக்கால் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாவதாக இருந்த ரஜினியின் ‘காலா’ படம் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ரஜினி நடிக்கப் போகும் புதுப்படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Posts
1 of 134

இதனாலேயே போராட்டத்தை உடைக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்ம் சிலபேர் மறைமுகமாக ரஜினியை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

”ஒரு மூத்த நடிகரும், விரைவில் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லும் நடிகருமான அவர் திரையுலக போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறார். தயாரிப்பாளர்களின் நலனுக்காக நடக்கும் இந்தப் போராட்டத்தை நசுக்க நினைப்பது சரிதானா? அவருடைய சுயநலமான திட்டமும் சரிதானா? இவரை நம்பி தமிழகத்தை ஆட்சி செய்யக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கை என்னாவது?’’ என்று குமுறுகிறார்கள்.

அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை நிரூபிக்கும் விதமாக வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கும் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி.

பெரிய மனுஷன் செய்ற வேலையா இது?