தளபதி’விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மறுவெளியீடாகும்’போக்கிரி’!

Get real time updates directly on you device, subscribe now.

கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு
ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

Related Posts
1 of 12

இத்திரைப்படம் அப்போதே ‘ஷிப்டிங்’ எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றன.அதற்கு சமீபத்திய உதாரணமாக ‘தளபதி’விஜய் அவர்கள் நடித்த ‘கில்லி’ திரைப்படம் மறுவெளியீடாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல், 50 நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ‘கில்லி’ மறுவெளியீட்டின் மாபெரும் வெற்றியுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக வரும் ஜூன்-22-ஆம் தேதி ‘தளபதி’விஜயின் 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ‘போக்கிரி’ திரைப்படம் உலகமெங்கும் வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுவெளியீடாக உள்ளது.

இத்திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்காக ‘தளபதி’விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.