பொன்மகள் வந்தாள் படம் பற்றி ஜோதிகா கமெண்ட்
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் நேரத்தில் ஜோதிகா கொடுத்துள்ள பேட்டியின் ஒரு பகுதி
“இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில் 5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக் கொண்டேன்” என்ற ஜோதிகா அந்தப்பேட்டியில் மேலும் பல்வேறு விசயங்களைப் பேசியிருக்கிறார்.