போத்தனூர் தபால் நிலையம்- விமர்சனம்
1990 கால கட்டங்களில் நடக்கும் கதையை ஒரு மெலோ திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஹீரோ ப்ரவீன் தபால் நிலையத்தில் லோன் கேட்டு லோ லோ என அலைபவர். ஒரு கட்டத்தில் போஸ்ட் ஆபிஸில் நூதனமுறையில் பணம் திருடு போகிறது. அதை ப்ரவீனே கண்டுபுடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட அவர் கண்டுபுடித்தாரா என்பதே கதை
ப்ரவீன் ஒரு ஆவ்ரேஜான பெர்பாமன்ஸை கொடுத்துள்ளார். ஒருசில இடங்களில் ஓ.கே ரகம். பிரவீனின் நண்பர் கேரக்டர் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயின் கேரக்டரிலும் பெரிய அழுத்தமில்லை. ப்ரவீனின் அப்பா கேரக்டரில் நடித்தவர் மட்டும் அழகாக ஈர்க்கிறார். வில்லன் கேரக்டர் பரவாயில்லை ரகம்
படத்தின் மேக்கிங்கில் நல்லமெனக்கெடல் இருப்பது இப்படத்தின் பெரிய ப்ளஸ். 90 கால கட்டத்தின் போஸ்ட் ஆபிஸை அதன் தன்மை மாறாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். போஸ்டர்ஸ், கேசட்ஸ் என படம் நம்மை அந்தக் காலகட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது.படத்தில் இந்தச் சுவராஸ்யத்தைத் தவிர்த்து பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை
முன்பாதியில் இருந்த திரை நேர்த்தி பின் பாதி படத்தில் இயக்குநருக்கு கைகூடி வரவில்லை. பின்னணி இசை பாடல்கள் ஒன்றும் பெரிதாக இல்லை.
பழைய மெமரிக்காக வேண்டுமானால் ஓடிடி என்பதால் ஒருமுறை பார்க்கலாம்
2.5/5