‘பொட்டு’ படத்துக்காக பரத் போட்ட மிரட்டலான கெட்டப்!

Get real time updates directly on you device, subscribe now.

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ”பொட்டு”.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.

மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படமாக தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் பரத் மிரட்டலான பெண் கெட்டப் போட்டிருக்கிறார்.  தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழைப் பெற்று விட்ட இந்தப்படம் தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்தது.

தற்போது ஜனவரி 11-ம் தேதி தெலுங்கிலும் சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே பொட்டு திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.