விஷால் படத்தின் புதிய அப்டேட்!

Get real time updates directly on you device, subscribe now.

17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமாக முடிவடைந்தது.

‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறோம்.

நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரணப்படம் அல்லாமல், சினிமா படைப்பை நேசிக்கும் ஒருவரின் உன்னத பயணம். நடிப்பு, இயக்கம் இவைகளில் ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Related Posts
1 of 11

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள்.

படக்குழுவினர்கள் இந்த 17நாட்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குறித்து பேசும் போது..

“ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலித்தது..” என்கின்றனர்.

“சூப்பர் குட் ஃபிலிம்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் மகுடம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம், 2026-இல் வெளியாகும் மக்களின் மனதில் மிகப்பெரிய வெற்றி பெறும்.