மூன்று பொண்டாட்டிகள்… போலீஸ், கோர்ட்… : பவர் ஸ்டாரை மிரள வைத்த புதுமுக இயக்குநர்!
‘க க க போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை கமலா தியேட்டரில் நடை பெற்றது.
இதன் ஆடியோவை அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் வெளியிட க.க.க.போ படத்தின் தயாரிப்பாளர் செல்வி சங்கர் உள்ளிட்ட ‘க க க போ’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் அன்பு பிக்சர்ஸ் அன்பழகன், பஞ்சு சுப்பு ,பவர் ஸ்டார், ஆதவன், சாக்க்ஷி அகர்வால், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் இசைமைப்பாளர்கள் பி.சி. சிவம், சி. வி. அமரா, இயக்குனர் கேபிள் சங்கர், விஜய் ஆதிராஜ், உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களுடன் இப்படத்தை வெளியிடும் தேவர் பிளம்ஸ்-ன் சி.எ. பாரதி ஐய்யப்பன் கலந்து கொண்டார்.
விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது,
ஒருநாள் டைரக்டர் விஜய் எனக்கு போன் பண்ணினார். அண்ணே எங்க இருந்தாலும் வாங்க ஒரு படத்துல நடிக்கணும்னு சொன்னார். இல்ல தம்பி நான் பாண்டிச்சேரியில இருக்கேன்னு பொய் சொன்னேன், பரவாயில்ல எங்க இருந்தாலும் வாங்கன்னு சொன்னார்.
உடனே கிளம்பி போனேன். அப்போ நைட்டு மணி ரெண்டு இருக்கும். போன உடனே எனக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தாங்க. என்ன தம்பி மிட்நைட்ல அட்வான்ஸ் பணம் கொடுக்குறீங்க..? இது உண்மையிலேயே தமிழ்ப்படம் தானா? இல்லேன்னா வேற மாதிரியான படமா?ன்னு கேட்டேன். இல்லேன்னே தமிழ்ப்படம் தான்னு சொன்னார்.
படத்துல எனக்காகவே ஒரு பாடல் காட்சி கொடுக்கப்பட்டது. அது எனது நிஜ கேரக்டரை சொல்லும் விதமாக இருந்தது. எனக்கு இந்த படத்தில் நடித்த காட்சிகளும் கோர்ட்டை மையப்படுத்தியே அமைந்தது, ஒரு கோர்ட் காட்சியில் நடிக்க போன போது அங்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். என்னப்பா இங்க வந்தாலும் ஒரே கோர்ட்டு, கேஸ், போலீஸ் தானான்னு கேட்டேன். அண்ணே நீங்க பார்த்தது நிஜ கோர்ட்டு, இது மொபைல் கோர்ட்டு என்றார் இயக்குநர். என்னோட பொறப்போ என்னன்னு தெரியல படமா இருந்தாலும், நிஜ வாழ்க்கையா இருந்தாலும் போலீஸ் கோர்ட், கேஸ்ன்னு தான் அமையுது. அந்த வகையில இந்தப்படம் உண்மையில் என் நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அதே போல் இந்த காட்சி மூன்று பெண்களுக்கு கணவன் என்று, என் நிஜ வாழ்க்கையோடு நினைவு செய்து விட்டார் இயக்குநர் என்று பவர் ஸ்டார் கலகலப்பாக பேசினார்.
இயக்குநர் விஜய் கூறியதாவது,
இப்படம் உண்மையிலேயே நிறைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமாக்கினேன். அவர்கள் அனைவரும் என்னை புதுமுக இயக்குநர் என்று கூட பார்க்காமல் என்னுடன் அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை தயாரித்த செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கு மிகவும் நன்றி மேலும் கதாநாயகி இணை இயக்குநர் போல் பணியாற்றினார் எனவும் இப்படத்தை வெளியிடும் தேவர் பிக்சர்ஸ். என்போன்று புதுமுக இயக்குனருக்கு மிகவும் உதவுவதாக கூறி நன்றியும் கூறினார்.
தயாரிப்பாளர் சங்கர் கூறியதாவது,
நான் மலேசியாவில் இருந்து வந்த தமிழன் என்கிறார்கள். ஆனால் நான் திருநல்வேலியில் இருந்து மலேசியா சென்ற தமிழன் என்றும் நான் இப்படத்தை என் மனைவி செல்விக்காக தயாரித்தேன். இதுபோன்று தமிழில் நிறைய திரைப்படங்களை தயாரிக்க போவதாகவும் கூறினார். என்னை இப்படத்திற்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விஜய்தான் என்றும், நான் தயாரிப்பாளர் என்ற முறையில் அவருக்கு அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன் அவரும் இப்படத்தை நன்றாக முடித்து கொடுத்தார். இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் குழுமத்திற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.