ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில்,பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப், ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம், “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இப்படத்தில் ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விபரம் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.