உதயநிதி ஸ்டாலினை ‘சைக்கோ’ ஆக்கிய மிஸ்கின்!
அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார் இயக்குனர் மிஸ்கின்.
‘சைக்கோ’ என்று டைட்டில் வைத்திருக்கும் இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கத்திடம் கேட்டபோது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.