ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த ‘ராக்கா’ பட லுக்!

Get real time updates directly on you device, subscribe now.

‘ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. ‘புஷ்பா2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘ராக்கா’ திரைப்படத்தில் அவருடைய முற்றிலும் புதிய தோற்றமே சான்று.

அவருடைய இந்த புதிய தோற்றத்தின் பின்னால் இருக்கும் கடின உழைப்பை படக்குழு வியந்து பாராட்டி வருகிறது. ‘ராக்கா’ படத்திற்காக அல்லு அர்ஜூனின் கதாபாத்திர தோற்றத்தை கொண்டுவர தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நட்சத்திரமான இருந்தபோதிலும் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அல்லு அர்ஜூன் செயல்படுகிறார்.

’ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு சான்றாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ‘ராக்கா’வில் அல்லு அர்ஜூனின் சிக்னேச்சர் கை அசைவை ரீகிரியேட் செய்திருக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் தனது புதிய தோற்றத்தின் மூலம் டிரெண்ட் செய்யும் நடிகர் அல்லு அர்ஜுன், ‘ராக்கா’ மூலம் மீண்டும் ஒரு புதிய திரை அனுபவத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு தர இருக்கிறார். இது வெறுமனே மேக் ஓவர் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.

Related Posts
1 of 8

ஒரு படம் வெற்றி கண்ட பிறகு அடுத்த படத்திலும் அதே பாணியை பின்பற்றாமல் அடுத்தடுத்த படங்களில் புதிய சவால்களை விரும்புவதே அல்லு அர்ஜூனின் வெற்றிக்கு காரணம். இந்திய சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிறகும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உழைத்து வருகிறார் அல்லு அர்ஜூன்.

ஓய்வின்றி உழைப்பது, அர்ப்பணிப்புடன் செயல்படுவது, தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது போன்றவையே உண்மையான நட்சத்திர அந்தஸ்து என்பதை அல்லு அர்ஜுன் மீண்டும் ஒருமுறை ‘ராக்கா’ பட அறிவிப்பில் தனது புதிய தோற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்தப் படமும் இந்திய சினிமாவை உலகளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.