ராயர் பரம்பரை- விமர்சனம்

இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருப்பவர் டிராயர் பரம்பரையான்😃
முழுக்க முழுக்க சிரிக்க வைக்கணும் என்ற முடிவோடு நம் முன் வந்து நின்ற ராயர் பரம்பரை நம்மை என்ன செய்தது? தொடர்பிலிருங்கள்
இவ்ளோ எம்டி பேஸ் எதுக்குன்னா…. கதையோட காலம் கரண்ட் ah? இல்ல பின்னோக்கியதா? என்ற க்ளாரிட்டிக்கு ஒரு வெற்றிடம் தேவைப்பட்டுச்சு
அதான்.
ராமராஜன் காலத்து கதையா இருந்தாக் கூட பர்வால.. இது காமராஜர் காலத்துக் கதை. லவ்னா பிடிக்காத டாடி, லவ்வியே தீருவேன் என அடம்பிடிக்கும் லேடி, இவருக்கு கிருஷ்ணா எப்படி ஆகிறார் ஜோடி..
கதை முடிஞ்
மொத்தமும் கிரிஞ்
நடிப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லன்னு உறுதியா நம்புற கிருஷ்ணாவை நடிப்போட சம்பந்தப்படுத்திப் பார்க்குறது யார் குற்றம்?
ஹீரோயின் கேட்டகிரியில் வரும் சரண்யா…இப்படியான படத்திக்குன்னே கிடைத்த ‘வரன்’யா.
ரிட்டயர்டு ஆன வில்லன்களை எல்லாம் காமெடிக்கு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு சட்டம் இயற்றணும். குறிப்பா ஆனந்த் ராஜுக்கு தனிச்சட்டம் இயற்றணும். “லிப்ட் கொடுத்தா டிப்ஸ் கொடும்மா” என ஒரு பன்ச் சொல்லிவிட்டு நாம சிரிக்கணும்னு ஒரு கேப் கொடுக்கிறார் பாருங்க….அவ்வ்வ்
இசை, ஒளிப்பதிவு, வசனப்பதிவு, வன்மப்பதிவு என டெக்னிக்கல் பதிவுகள் எல்லாம் படத்தில் பதிய மிகவும் சிரமப்பட்டது
எங்க தாத்தா காலத்துல பள்ளிக்கூடத்துல சிலேட்லாம் கிடையாதாம். மண்ணுல தான் எழுதிப்பழகுவாங்களாம்.
“ஆனா போட்டாச்சால..ம்ம் இனிம அழிச்சிட்டு ஆவன்னா போடுங்கல”ன்னு வாத்தி சொன்னதும் எல்லாரும் மண்ணுமேல கண்ணும் கருத்துமா இருப்பாங்களாம். மண்ணுல எழுதுறது மனசுல பதிஞ்சி தான் இன்று வழிநெடுக கல்வி வரலாறு டாப்பா இருக்கு. இப்ப இதை எதுக்குச் சொல்றோம்னா…சம்பந்தமில்லாத இடத்தில சம்பந்தமில்லாததைப் பேசினா பிசகுன்னு தெரியும். இருந்தாலும் இதில் ஒரு குறியீடு இருக்கு என்பதைச் சொல்லிக்கொண்டு…..அடுத்த விமர்சனத்தில் உங்களைச் சந்திக்கிறான் இந்த👇
-ட்ராயர் பரம்பரையான்
2/5