‘மானாட மயிலாட’ கீர்த்தியை மணக்கிறார் நடிகர் சாந்தனு!
நடிகர் சாந்தனு காதல் திருமணத்துக்கு தயாராகி விட்டார். வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை அவர் காதல் திருமணம் செய்கிறார்.
இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் மகள் சரண்யா இப்போதைக்கு எனக்கு திருமணம் வேண்டாம். கொஞ்சநாள் பொறுத்திருந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்க உள்ளது.
பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் மகள் கீர்த்தி தான் மணப்பெண். வரும் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது” இவ்வாறு கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ்.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாகவே சாந்தனுவும், கீர்த்தியும் ரகசியமாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் அதையெல்லாம் இருவருமே மறுத்த வந்தனர். இந்நிலையில் சாந்தனு – கீர்த்தி திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.