‘ரெடி டு சூட்’ – நம்புங்க இது படத்தோட டைட்டில் தான்!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளில் படங்கள் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் தயாராகி வரும் த்ரில்லர் படம் தான் ”ரெடி டு சூட்”
எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ். ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை ஜூன் 29-ம் தேதி சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நேரம், பிரேமம், வெற்றிவேல் போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜீவிதா நடிக்கிறார். வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
படத்தை மனோஜ்குமார் இதயராஜ் இயக்குகிறார். ஒளிப்பதிவு – சதீஷ் கதிர்வேல் இசை – அச்சு. முழுக்க முழுக்க த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.