ஆணியவே புடுங்க வேண்டாம்… : விஜய்யின் புதிய ஹிட் ஃபார்முலா
அட இது நம்ம தலைவரோ படமா..? என்று அவரது ரசிகர்களே வாயைப் பிளக்கும் அளவுக்கு தனது படங்களின் ஸ்டைலை மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய்.
அழகிய தமிழ்மகன், சுறா என விஜய் நடித்த மசாலாப் படங்கள் எல்லாமே ஒரே டைப் கதைகள் மட்டுமில்லாமல் அதில் வரும் பஞ்ச் வசனங்கள் ஸ்டைல்கள் எல்லாமே ரசிகர்களுக்கு எரிச்சலைத் தந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனால் விஜய் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ரிலீசுக்கு முன்னரே முடிவுக்கு வரும் ரசிகர்களுக்கு புது ட்ரீட்டாக இருந்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரிலீசான ‘கத்தி’ திரைப்படம்.
இதில் டபுள் ரோலில் கலக்கியிருந்தாலும் எந்தவித பில்டப் சீன்களும் இல்லாமல் அளவாக நடித்தார். படமும் வசூலை அள்ளியது. இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியே விஜய்யை இப்போது ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறதாம்.
அதனால் தான் இனி தன்னுடைய படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருக்கும் விஜய் படத்தில் தேவையில்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைக்காட்சிகளோ, பில்டப் காட்சிகளோ வேண்டாம் என்று கண்டிஷன் போடுகிறாராம்.
அப்படி ஒரு படமாகத்தான் தயாராகி வருகிறது விஜய்யின் அடுத்த படமான புலி திரைப்படம்.
அதுமட்டுமில்லாமல் இனி தன் படத்தை எல்லா ரசிகர்களும் குடும்பத்தோடு பார்க்கும் படியான படமாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படித்தான் அட்லியின் படமும் இருக்கும் என்கிறார்கள்.
ஹீரோவைப் பார்க்காமல் வித்தியாசமான கதையோடு ரிலீசாகும் படங்கள் பெரும் வரவேற்பைப் பெருவதால் இப்படி ஒரு ட்ரெண்ட்டுக்கு இறங்கி வந்திருக்கிறார் விஜய் என்கிறது அவரது நெருங்கிய வட்டாராம்.
அதையும் மீறி எந்த இயக்குநராவது கமர்ஷியல், மசாலா என்று தன்னை நெருங்கினால் ”ஆணியவே புடுங்கவே வேண்டாம்” என்று சிறு புன்னகையோடு திருப்பி அனுப்பி விடுகிறார் விஜய்.
‘மாற்றம்’ நல்லது தானே..?