Love வெப்சீரிஸ் பற்றி செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

 

Love வெப்சீரிஸின் டிரெய்ல வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சீரிஸின் நாயகன் அர்ஜுன் தாஸ், நாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நெட்ஃப்ளிக்ஸின் இந்த சீரிஸின் ஷோ ரன்னரான செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது

“இன்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் ‘#Love’ தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.

Related Posts
1 of 3

நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி. அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான். ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.

இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான். ‘#Love’ தொடரின் டிரெய்லரையும், தொடர்ந்து முழுத் தொடரையும் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”