லெனின் பாண்டியன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

சிவாஜி வீட்டிலிருந்து இன்னொரு கலை வாரிசு! எப்படி இருக்கு படம்?

சிவகங்கை மாவட்டம் ஒரு கிராமத்தில் கங்கை அமரன் ரோஜா தம்பதி தனிமையான ஒரிடத்தில் ஆடு மேய்த்தும் விவசாயம் பார்த்தும் வாழ்ந்து வருகிறார்கள். அதே மாவட்டத்தில் வேறோர் சரகத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் தர்ஷன் கணேசன். கொஞ்சம் சாந்த சொரூபியான அவரை டிப்பார்ட்மெண்ட் மதிக்கவேயில்லை. கங்கை அமரனுக்கும் உள்ளுர் மணல் மாபியா யுகேந்திரனுக்கும் ஒரு பஞ்சாயத்து வருகிறது. அந்த பஞ்சாயத்தில் தர்ஷன் கணேசன் அசோசியேட் ஆகிறார். அதன்பின் கங்கை அமரனும் தர்ஷன் கணேசனும் மணல் மாபியா குருப்பை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை

கங்கை அமரன் இந்த வயோதிகத்திலும் தன்னால் முடிந்த அளவு நன்றாக நடித்துள்ளார். ரோஜா அவருக்கு உற்ற துணையாக மனதில் பதிகிறார். தர்ஷன் கணேசன் ஓரளவு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்..ஆக்சன் காட்சிகளில் இன்னும் பெட்டர்மெண்ட் தேவை. போஸ் வெங்கட் போதுமானளவு நம் வெறுப்பைச் சம்பாதிக்கிறார். யுகேந்திரன், ஆடுகளம் நரேன் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை..நாயகி ஸ்ரீரிட்டா ராவ் நல்ல தேர்வு. ஜார்ஜ் மரியன் பின்னியெடுத்துள்ளார்

இளையராஜா இசையில் பெரிய திருப்தி இல்லை என்றாலும் பெரிதாக குறையுமில்லை. ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் நேட்டிவிட்டியோடு காட்சிகளை பதிவு செய்துள்ளார். எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன் இன்னும் இருபது நிமிடங்களை வெட்டியிருக்கலாம்

அழுத்தி வைக்கப்படும் பந்து மேலெழுந்தே தீரும் என்பது நியதி. இந்தப் பாயிண்ட் கதையில் ஸ்ட்ராங்காக இருந்தும் ஆர்கானிக் தன்மை இல்லாத திரைக்கதையால் எல்லாம் வேஸ்டாகிவிட்டது. சிலபல நல்ல காட்சிகள் மட்டுமே படத்தை காப்பாற்றும் என இயக்குநர் DD பாலச்சந்திரன் நம்பியிருக்கிறார். கல்வி குறித்தும் சமூகநீதி குறித்தும் ஜார்ஜ் மரியன் எடுக்கும் தரமான பாடம் மட்டுமே படத்தைப்.பாராட்ட வைக்கிறது
2.75/5