படப்பிடிப்புக்கு வருவார் ரேஷ்மிமேனன்; ஆனால்..? : பாபிசிம்ஹாவின் பலே திட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

reshmimenon

‘உறுமீன்’ படத்தில் சேர்ந்து நடித்த போது பாபி சிம்ஹாவுடன் காதலில் கட்டுண்டவர் ரேஷ்மிமேனன்.

இந்த தகவல் மீடியாக்களில் கசியவும் அதை இருவருமே மற்ற காதல் ஜோடிகளைப் போல மறுத்தனர். பிறகு அந்த உண்மையை இருவருமே ஒப்புக்கொண்டனர். சென்ற மாதம் ஒரு நல்ல நாளில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 24-ம் தேதி திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு ரேஷ்மிமேனன் படங்களில் நடிப்பார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரேஷ்மிமேனன் நடிப்பதற்கு பாபி சிம்ஹா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து விட்டதால் திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போடுகிறார்.

Related Posts
1 of 19

எப்படி இருந்தாலும் ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதே? அதனால் காதல் ஜோடிகளுக்குள் மனக்கசப்பு வந்து விடக்கூடாது என்று யோசித்த பாபி சிம்ஹா தன் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முழுமையாக ரேஷ்மி வசம் ஒப்படைக்கப் போகிறாராம்.

திருமணத்துக்குப் பிறகு வெறுமனே வீட்டில் இருந்தால் அவருக்கும் போரடிக்கும், அதனால் தான் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்பை கொடுத்து விட இருக்கிறேன். அவருக்கும் நேரம் போவது போல் இருக்கும், சினிமாவுக்குள்ளும் அவரது பங்களிப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கும். என்கிறார் பாபி சிம்ஹா.

ஸோ… திருமணத்துக்குப் பிறகும் படப்பிடிப்புக்கு வருவார் ரேஷ்மிமேனன். நடிகையாக அல்ல ஒரு தயாரிப்பு நிர்வாகியாக…!