பப்ளிசிட்டிக்கு வர மாட்டேன் : ரேஷ்மி மேனனோட அளப்பறை தாங்க முடியல!
நேத்து வரைக்கும் ரேஷ்மிமேனன் என்ற பெயரைச் சொன்னாலே ”யார் அது கெளதம்மேனனோட சொந்தக்காரப் பொண்ணா..?” என்று கேட்கிற அளவுக்குத்தான் அவருடைய ரேஞ்ச் இருந்தது.
ஆனால் இன்றைக்கோ ‘பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவி’ என்கிற அந்தஸ்து சேர்ந்து கொண்டதாலோ என்னவோ ரேஷ்மிமேனனின் நடவடிக்கையிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக இருந்தால் பரவாயில்லை.
கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடிக்கும் மாற்றமாக இருந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?. அதைச் சொல்லித்தான் செமக்கடுப்பில் இருக்கிறது ‘கிருமி’ பட யூனிட்.
‘காக்கா முட்டை’ என்கிற யதார்த்த சினிமாவை கொடுத்த இயக்குநரான மணிகண்டனின் கதை, திரைக்கதையில் தயாராகியுள்ள ‘கிருமி’ படத்தில் ஹீரோவாக கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி ரேஷ்மிமேனன். அனுசரண் இயக்கியிருக்கிறார்.
முழுப்படப்பிடிப்பும் முடிந்து நாளை காலை ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற்ற உள்ள நிலையில் திடீரென்று ஆடியோ பங்ஷனுக்கு வர மாட்டேன் என்றும், படத்தின் பப்ளிசிட்டி உள்ளிட்ட எந்த விஷயங்களுக்கும் வர மாட்டேன் என்றும் கறார் காட்டுகிறாராம்.
அந்த கறாரின் பின்னணியை விசாரித்தால் படத்தில் வருகிற ஒரு ‘நெருக்கமான சீன்களை’ காரணம் காட்டுகிறார் ரேஷ்மி.
இது குறித்து தயாரிப்பாளரிடம் விசாரித்தால் ‘கிருமி’ படத்துல ஹீரோ கதிருக்கும் ரேஷ்மிக்கும் ரொம்ப ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள் இருக்கு. படத்தை ஆரம்பிச்சப்போ நடிக்க வந்த ரேஷ்மி இந்த சீனுக்கெல்லாம் எந்த மறுப்பும் சொல்லாமல் நல்லா கோ-ஆப்ரேட் பண்ணி நடிச்சாங்க. இப்போ படமெல்லாம் முடிஞ்சு நாளைக்கு நடக்க இருக்கிற ஆடியோ பங்ஷனுக்கு கூப்பிட்டா நான் நெருக்கமா நடிச்ச சீன்களையெல்லாம் வெட்டி எடுங்க அப்பத்தான் வருவேன்னு சொல்றார் என்கிறார்.
என்னடா இது வம்பாப்போச்சு என்று தயாரிப்பாளர் விஷயத்தை இயக்குநரிடம் எடுத்துச் சொல்ல அவரோ ”அந்தக் காட்சிகள் கதைக்கு மிகவும் தேவை. இல்லா விட்டால் படம் அழுத்தமாக இருக்காது. எனவே நீக்க முடியாது” என்று தன் பக்க நியாயத்தை சொல்கிறார்.
“இந்த சீனெல்லாம் இருக்குன்னு சொல்லித்தான் அந்தப் பொண்ணை படத்துல கமிட் பண்ணினோம், ஆரம்பத்துல எல்லாத்துக்கு தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டிட்டு இப்போ திடீர்னு இப்படி சொல்லுது” என்று ரேஷ்மி மீது கடும் கோபத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் உள்ளிட்ட கிருமி பட யூனிட்.