ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி பரவிய வதந்தி : அதுக்குள்ள ஏம்ப்பா அவசரப்படுறீங்க…?

Get real time updates directly on you device, subscribe now.

a.r.rahman

பிரியதர்ஷன் இயக்கத்தில் திங் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் பரவியது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இயக்குநர் விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

எனது குருநாதர் பிரியதர்ஷன் சார் அவர்களின் மானசீகமான படம் இது.

Related Posts
1 of 11

தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தப்படத்தில் இணைக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை தான். சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொண்டுவரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் சார் படப்பிடிப்பிற்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

முழுப் படபிடிப்பும் முடிந்த பிறகு படத்தை ஏ.ஆர் ரஹ்மான் சாருக்கு போட்டுக் காண்பிப்போம். படம் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு பிடித்திருந்தால் பின்னணி இசையமைப்பார். இன்னு8ம் அவரை கமிட் செய்யவில்லை என்பது மட்டும் உண்மை என்றார் விஜய்.

அதுக்குள்ள ஏம்ப்பா அவசரப்படுறீங்க…?